நீங்கள் விபத்தில் அல்லது வன்முறைக் குற்றச் சம்பவத்தில் காயப்பட்டுள்ளீர்களா?
எங்கள் விசேட பயிற்சி பெற்ற நிபுணர்குழு, உங்களுக்கு 'வெற்றியில்லையேல் கட்டணமில்லை' என்ற அடைப்படையில் சட்ட ஆலோசனைகளையும் உதவிகளையும் வழங்கக் காத்திருக்கிறார்கள். எங்கள் கட்டணங்களை உங்களது எதிராளியிடமிருந்து அறவிடுவதனால் உங்களுடைய நட்ட ஈட்டில் கழிப்பனைவு எதுவுமின்றி உங்களுக்குத் தீர்க்கப்பட்ட இழப்பீட்டுத் தொகையை முழுமையாக (100%) வழங்குகிறோம்*.
நாங்கள் விபத்தில் ஏற்படும் காயங்களுக்கான நட்ட ஈடு பெற்றுத்தருவதில் நிபுணர்கள். தனிநபர் ஊறுகளுக்கான எமது வழக்கறிஞர் குழு ஆண்டு தோறும் ஆயிரக்கணக்கான வழக்குகளை இங்கிலாந்தின் பல பகுதிகளிலுமுள்ள கட்சிக்காரர்களுக்கும், தற்போது பிற நாட்டில் நிலைகொண்டுள்ள கட்சிக்காரர்களுக்கும் வெற்றிகரமாக நடாத்தி முடித்துள்ளதுடன், £1000லிருந்து £1000,000க்கும் கூடுதலான இழப்பீட்டுத்தொகையை பெற்றுத்தந்துள்ளனர்.
உங்களது நட்ட ஈடுகோரும் விண்ணப்பங்கள் எங்களது அனுபவமும், தேர்ச்சியுமுள்ள குழுவிலுள்ள தமிழ் பேசும் அங்கத்தவரால் கையாளப்படுவதுடன், சிரேஸ்ட சட்டத்தரணியினால் மிகவும் உன்னிப்பாக மேற்பார்வை செய்யப்படும். நீங்கள் நாட்டில் எப்பகுதியில் வாழ்ந்தாலும் உங்கள் வீட்டில், பணியிடத்தில் அல்லது மருத்துவமனையில் உங்களை நேரில் சந்திக்க முடியும்.
உங்களது விண்ணப்பத்தை மேற்கொள்வதற்கு இங்கே 'கிளிக்' செய்யவும்.
அல்லது, மாணிக்கம் யோகேந்திரனை 020 8826 1355 என்ற நேரடித்தொலைபேசி இலக்கத்தில் அல்லது 0800 0180 385 என்ற இலவச தொலைபேசி இலக்கத்தில் அழைக்கவும்.
கீழ்க்காணும் விடயங்கள் சம்பந்தமான விண்ணப்பங்களை நாங்கள் கையாள்கிறோம் :-
► வீதிப்போக்குவரத்து விபத்தில் (சாரதிகள், பயணிகள், நடைபாதசாரிகள், கார்விபத்துகள், சைக்கிள் மோட்டார் சைக்கிள் விபத்துகள் உட்படவும், விபத்துக்கு காரணமான சாரதியைக் கண்டு பிடிக்கமுடியவில்லையெனிலும் அல்லது காப்புறுதி செய்யப்படவில்லையெனிலும், மோட்டார் காப்புறுதி நிறுவனத்திடம் கோரும் நட்ட ஈட்டுத்தொகை உட்பட)
► பொதுப்போக்குவரத்து விபத்துகள் (பஸ், ரயில், விமானம், கப்பல் ஆகியவற்றில்)
► பணியிடத்தில் விபத்துகள் ( தொழிற்சாலைகள், அலுவலகங்கள், கடைகள், கட்டுமான இடங்கள், பாடசாலைகள், மருத்துவ மனைகள் மற்றும் ஏனைய தொழிலிடங்கள்)
► தொழிற்சாலை நோய்கள்/ தொழில்சார்ந்த நோய்கள்
► பொது இடங்களில் தடக்கி அல்லது வழுக்கி விழுதல்
► வன்முறைக் குற்றக்காயங்களுக்கு குற்றவியல் காயங்களுக்கான இழப்பீடு அதிகாரசபையிடமிருந்து (CICA CLAIMS) இழப்பீடு கோருதல்.
► குழந்தைகளுக்கு ஏற்படும் விபத்துகள்.
► விபத்துகளுக்கு பொருட்கள் காரணமாக இருத்தல் (பழுதான அல்லது ஆபத்தான பொருட்கள், உணவினால் நஞ்சுட்டப்படுதல், விளையாட்டின் போது ஏற்படும் விபத்துகள்)
► முள்ளந்தண்டில் ஏற்படும் ஊறுகள், மூளையில் ஏற்படும் ஊறுகள் அது போன்ற பேராபத்தை உண்டுபவைகளுக்கு இழப்பீடு கோருதல்.
► மரணத்தை ஏற்படுத்திய விபத்துகள்.
நாங்கள் தமிழ் பேசும் சமூகங்களுடன் மிகவும் நெருக்கமான உறவுகளை விருத்தி செய்துள்ளோம் என்பதில் பெருமையடைகிறோம்.
கவுன்ஸிலோ தமிழ் சமூக நடுவம் ஊடாகவும் பிற தமிழ்ச் சங்கங்கள் ஊடாகவும் தமிழ் சட்டத்தரணிகள் நிறுவனங்கள் பல ஊடாகவும் பல தனி நபர்கள் ஊடாகவும் தமிழ் பேசும் மக்களுடன் எங்கள் தொடர்புகளை பேணி வருகிறோம்.
தொழில், கல்வி, வலதுகுறைந்தோர், குற்றவியல் சார்ந்த சட்டத்துறைகளிலும் எங்களது சேவையை வழங்கி வருகிறோம். பல வழக்குகளில் 'வெற்றியில்லையேல் கட்டணமில்லை' என்ற அடிப்படையில் அல்லது அரச சட்ட நிதி பெறுவதன் மூலம் இழப்பீடு கோருதலில் ஆஜராகியுள்ளோம்.
சட்டத்தரணிகள் நெறிப்படுத்தும் அதிகார (Solicitors Regulatory Authority) யினால் எங்கள் சட்ட நிறுவனம் நெறிப்படுத்தப்படுகிறது. இத்துடன் எமது நிறுவனம் சட்ட ஒழுங்கமைப்புச் சபையின் (Law Society) தனிநபர் இழப்பீடு இணைப்புத் திட்டத்திலும் அங்கத்தவராக உள்ளதுடன், சட்ட சேவைகள் ஆணையத்தினால் (Legal Services Commission) வழங்கப்படும் நிபுணத்துவ தரக்கட்டுபாட்டு சின்னத்தையும் (Special Quality Mark) பெற்றுள்ளது.
* கண்டுபிடிக்க முடியாத வாகன சாரதிகள் சம்பந்தப்பட்ட அல்லது வன்முறை குற்றக் காயங்களுக்கான இழப்பீடு தவிர இந்த இரண்டிலும் நீங்கள் வெல்லும் பட்சத்தில் மாத்திரம், எங்களது கட்டணமாக ஒரு குறிப்பிட்ட விகிதாசாரம் நீங்கள் பெறும் இழப்பீட்டுத் தொகையிலிருந்து கழிக்கப்படும்.
|